நகரமயமாக்கல் போக்குகளின் நிலையான ஒப்பீட்டை உறுதி செய்வதற்காக, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட அதே நகர்ப்புறப் பகுதியின் வரையறையை 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பும் கொண்டிருக்கும்.
ஒரு நகர்ப்புற அலகு அல்லது 'மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்' என்பது
குறைந்தபட்சம் 5,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம்,
சதுர கிலோமீட்டருக்கு 400 பேர் கொண்ட மக்கள் தொகை அடர்த்தி, மற்றும்
குறைந்தபட்சம் 75% என்ற எண்ணிக்கையிலான உழைக்கும் ஆண்கள் வேளாண் சாரா வேலைகளில் ஈடுபட்டுள்ள பகுதி என வரையறுக்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டில், 31.2% மக்கள் நகர்ப்புறங்களிலும், 68.8% மக்கள் கிராமப் புறங்களிலும் வசித்து வந்ததுடன் இந்தியாவில் 15,870 நகர்ப்புற அலகுகள் மற்றும் நகரங்கள் இருந்தன.
1951 ஆம் ஆண்டில் 17.3% ஆக இருந்த நகர்ப்புற மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டில் 31.2% ஆக உயர்ந்ததுடன், 2011 ஆம் ஆண்டில் மொத்தக் கிராமங்களின் எண்ணிக்கை 640,867 ஆக இருந்தது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான அதிகார வரம்பு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல்களைத் தயாரிக்குமாறு இந்தியத் தலைமைப் பதிவாளர் அலுவலகம் ஆனது மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது.
சட்டப்பூர்வ நகரங்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று அவை இருக்கும் நிலையிலேயே கணக்கிடப்படும்.
இது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு நிர்வாக எல்லைகள் முடக்கப்படும் தேதி ஆகும்.
2027 ஆம் ஆண்டில் 5,000 எண்ணிக்கையை எட்டியிருக்க வாய்ப்புள்ள கிராமங்களை அடையாளம் காண்பதற்காக, 2011 ஆம் ஆண்டில் 4,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கிராமங்கள் ஆய்வு செய்யப்படும்.
வேளாண்மை, தோட்டங்கள், கால்நடைகள், வனவியல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண் தொழிலாளர்கள் வேளாண் சாரா வகையிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.
மாவட்ட அல்லது துணைப்பிரிவு தலைமையகங்கள் ஆனது மக்கள்தொகை அளவுருக்களைப் பூர்த்தி செய்து சட்டப்பூர்வ நகரங்களாக இல்லாவிட்டால் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்களாக வகைப்படுத்தப்படும்.
பல கிராமங்களை ஒரே மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாக தொகுக்க இதில் அனுமதிக்கப்படவில்லை; எனவே ஒவ்வொரு கிராமமும் ஒரு தனி அலகாகக் கருதப் படும்.
2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆனது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் தொடங்கப் படும், மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்புக் கட்டம் ஆனது 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டில் பயன்படுத்துவதற்காக நிர்வாக எல்லைகள் ஆனது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்பட வேண்டும்.