TNPSC Thervupettagam

நகோயா நெறிமுறை குறித்த தேசிய அறிக்கை

March 24 , 2026 3 days 58 0
  • நகோயா நெறிமுறையைச் செயல்படுத்துவது குறித்த தனது முதலாவது தேசிய அறிக்கையை (NR1) இந்தியா உயிரியல் பன்முகத்தன்மை குறித்த உடன்படிக்கை செயலகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
  • இந்த அறிக்கை, 2017 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அணுகல் மற்றும் பலன் பகிர்வு (ABS – மரபணு வளங்களிலிருந்து கிடைக்கும் பலன்களைப் பகிர்தல்) தொடர்பாக இந்தியாவின் பணிகளை விளக்குகிறது.
  • உள்ளூர்ப் பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா முழுவதும் சுமார் 2,76,653 பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் (BMCs) அமைக்கப்பட்டன.
  • தேசியப் பல்லுயிர் ஆணையம் (NBA) மற்றும் மாநில பல்லுயிர் வாரியங்களால் (SBBs) ஆராய்ச்சி மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக மொத்தம் 12,830 அனுமதிகள் வழங்கப் பட்டன.
  • இதில் ₹216.31 கோடி நிதி வசூலிக்கப்பட்டது, அதில் ₹139.69 கோடி உள்ளூர் சமூகங்கள், விவசாயிகள் மற்றும் பாரம்பரிய அறிவு கொண்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
  • 2010 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்ட நகோயா நெறிமுறை, மரபணு வளங்களில் இருந்து கிடைக்கும் பலன்கள் மிகவும் நியாயமான முறையில் பகிரப்படுவதை உறுதி செய்வதோடு, பாரம்பரிய அறிவையும் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்