நச்சுத்தன்மை வாய்ந்த பெரோவ்ஸ்கைட் சூரிய மின்கலங்களை மறுசுழற்சி செய்தல்
July 17 , 2025 4 days 27 0
நச்சுத்தன்மை வாய்ந்த பெரோவ்ஸ்கைட் சூரிய மின்கலங்களை மறுசுழற்சி செய்வதற்காக அறிவியலாளர்கள் ஒரு பசுமையான நீர் சார்ந்த முறையை உருவாக்கி உள்ளனர்.
இது சுமார் 99% பொருட்களை மீட்டெடுத்து ஐந்து சுழற்சிகளுக்குப் பிறகும் கிட்டத்தட்ட முழு செயல்திறனைத் தக்க வைத்துக் கொண்டது.
இது டைமெத்தில்ஃபார்மமைடு போன்ற நச்சுத் தன்மை வாய்ந்த கரைப்பான்களின் தேவையை நீக்குகிறது.
இந்தச் செயல்முறையானது சோடியம் அசிடேட்டைப் பயன்படுத்தி ஈயத்தைப் பாதுகாப்பாகப் பிரித்தெடுக்கிறது, அதே நேரத்தில் சோடியம் அயோடைடு மற்றும் ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் பெரோவ்ஸ்கைட் படிகங்களை மீண்டும் உருவாக்க உதவுகின்றன.
பெரோவ்ஸ்கைட் வகை சூரிய மின்கலங்கள் பெரோவ்ஸ்கைட் கட்டமைக்கப்பட்ட சேர்மங்களைப் பயன்படுத்தும் ஒளிமின்னழுத்த சாதனங்களின் ஒரு வகையாகும்.
இது பொதுவாக ஒளிச் சேமிப்பு செய்யும் செயலில் உள்ள அடுக்காக ஈயத்தைக் கொண்டுள்ளது.
இது சூரிய ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவதோடு, பசுமையான ஆற்றலுக்கான இந்தியாவின் உந்துதலை ஆதரிக்கும்.