மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் துணைநிலை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் மூன்றாம் நிலையிலான இந்தியாவின் முதலாவது நடமாடும் உயிரிப் பாதுகாப்பு ஆய்வகத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
இது இந்தியாவின் முதலாவது மூன்றாம் நிலை நடமாடும் உயிரிப் பாதுகாப்பு ஆய்வகமாக (Biosafety Level-3 mobile laboratory) மாறியுள்ளது.
இந்த நடமாடும் ஆய்வகமானது புதிதாக உருவாகி வரும் மற்றும் திரும்ப உருவாகும் வைரஸ் தொற்றுகள் பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொள்ள உதவும்.