- மத்திய மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் நிதின் கட்காரி நடமாடும் தேனீ வளர்ப்புப் பயிற்சி வாகனத்தைத் (Apiary on Wheels) தொடங்கி வைத்துள்ளார்.
- Apiary on Wheels என்பது காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (Khadi and Village Industries Commission - KVIC) வடிவமைத்த ஒரு தனித்துவமான கருத்தாகும்.
- நேரடி தேனீ காலனிகளைக் கொண்ட தேனீப் பெட்டிகளை எளிதில் பராமரித்தல் மற்றும் இடம்பெயர்வின் மூலம் தேனீ வளர்ப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த முயற்சியானது தேசிய தேன் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.

தேசிய தேன் திட்டம் பற்றி:
- தேசிய தேன் திட்டமானது 2017 ஆம் ஆண்டில் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- தேனீக்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலையற்ற இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
KVIC பற்றி:
- KVIC ஆனது ஒரு சட்டரீதியிலான அமைப்பாகும்.
- இது 1956 ஆம் ஆண்டு காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
- இது மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.