உள்ளூர் செய்திகளையும் பாடல்களையும் பரப்புவதற்காக அசூர் பழங்குடியினர் நடமாடும் வானொலியைப் பயன்படுத்துகின்றனர். இது அழிந்து வரும் பழங்குடியின மொழியைப் புதுப்பிக்க உதவுகின்றது.
அசூர் பழங்குடியினர் இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் வாழும் ஒரு ஆஸ்ட்ரோ ஆசியாடிக் இனக் குழுவினர் ஆவர்.
இவர்கள் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups - PVTG’s) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சர்ஹுல், பாகுவா, நவகான் ஆகியவை இந்தப் பழங்குடியினரின் முக்கியமான திருவிழாக்களாகும்.