நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கான கொள்கையை வடிவமைத்தல்
June 2 , 2025 55 days 86 0
நிதி ஆயோக் அமைப்பானது, "நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்காக என்று கொள்கையை வடிவமைத்தல்" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்களை இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சிமிக்க இயந்திரங்களாக மாற்றுவதற்கான ஒரு விரிவான செயல் திட்டத்தினை இது வழங்குகிறது.
MSME துறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 29% பங்களிக்கிறது.
அவை ஏற்றுமதியில் 40% பங்களிக்கின்றன என்பதோடு மேலும் 60 சதவீதத்திற்கும் அதிகமானப் பணியாளர்களைப் பணியமர்த்தியுள்ளன.
பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்களில் 97% குறு நிறுவனங்கள், 2.7% சிறு நிறுவனங்கள் மற்றும் 0.3% மட்டுமே நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் ஆகும்.
இருப்பினும், இந்த 0.3% நடுத்தர நிறுவனங்கள் MSME ஏற்றுமதியில் சுமார் 40% என்ற அளவிற்குப் பங்கினை அளிக்கின்றன.