கால்டெக் நிறுவனமானது, 6,100 கியூபிட்களுடன் உலகின் மிகப்பெரிய நடுநிலையான அணு சார் கியூபிட் தொகுப்பினை உருவாக்கி, பிழைத் திருத்தம் மற்றும் பெரிய அளவிலான குவாண்டம் கணினி இயக்கத்தினை நோக்கி முன்னேறி வருகிறது.
ஒரு கியூபிட் என்பது ஒரு வழக்கமான பிட் அலகுக்கான குவாண்டம் எதிரிணையாக செயல்படுகின்ற, குவாண்டம் தகவலின் அடிப்படை அலகு ஆகும்.
கியூபிட் பற்றிய கருத்தை அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளர் பெஞ்சமின் ஷூ மேக்கர் அறிமுகப்படுத்தினார்.
கியூபிட்கள் எலக்ட்ரான்கள், ஃபோட்டான்கள், பிடிபட்ட அயனிகள், அணுக்கள் மற்றும் மீக்கடத்து சுற்றுகள் போன்ற குவாண்டம் துகள்களைப் பயன்படுத்திக் கட்டமைக்கப் படுகின்றன.