TNPSC Thervupettagam

நடுவர் தீர்ப்பாயம் மற்றும் சமரசச் சட்டம் -1996 மீதான திருத்தம்

February 18 , 2020 1981 days 1723 0
  • மத்திய அரசானது நடுவர் தீர்ப்பாயம் மற்றும் சமரசச் சட்டம், 1996 என்பதனை நடுவர் தீர்ப்பாயம் மற்றும் சமரச (திருத்த) சட்டம், 2015 என்பதன் மூலம் திருத்தியுள்ளது.
  • இது நடுவர் செயல்முறையானது சீரான முறையில் நடைபெறுவதையும் செலவு குறைந்ததாகவும் வழக்கை விரைவாக விசாரித்து முடிப்பதையும் நடுவரின் நடுநிலைத் தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திருத்தமானது இந்தியாவின் ஒரு சுயாதீன நிறுவன நடுவர் தீர்ப்பாய ஆணையத்தை உருவாக்க வழிவகை செய்கின்றது.
  • இது உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் நியமிக்கப்படுவதற்குப் பதிலாக உச்ச நீதிமன்றம்/உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட “நடுவர் நிறுவனங்களால்” நடுவர்களை நியமிக்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்