TNPSC Thervupettagam

நடைபெறவிருக்கும் கூட்டு இராணுவப் பயிற்சிகள்

October 9 , 2019 2127 days 916 0
  • இந்தியா பின்வரும் நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றது.
காசிந்த் 2019
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 02 முதல் 15 வரை இந்தியாவிற்கும் கஜகஸ்தானிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான காசிந்த் 2019 என்ற பயிற்சியானது உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோரகார்கில் நடத்தப் படுகின்றது.
  • இது கஜகஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவற்றில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திரப் பயிற்சியின் நான்காவது பதிப்பாகும்.
ஏகுவெரின் 2019
  • இந்திய ராணுவத்துக்கும் மாலத்தீவுகளின் தேசிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் பத்தாவது பதிப்பானது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 07 முதல் 20 வரை மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஆந்த் ராணுவ நிலையத்தில் நடத்தப் படுகின்றது.
  • ஏகுவெரின் என்றால் மாலத்தீவின் திவேஹி மொழியில் ‘நண்பர்கள்’ என்று பொருள்படும்.
  • இதுபோன்ற ஒரு முதலாவதுப்  பயிற்சியானது 2009 ஆம் ஆண்டில் தொடங்கியது.
மைத்ரீ 2019
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 29 வரை இந்தியாவும் தாய்லாந்தும் கலந்து கொள்ளும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான MAITREE – 2019 என்ற பயிற்சியை வெளிநாட்டுப் பயிற்சி முனையமான உம்ரோயில் (மேகாலயா) இந்த இரு நாடுகளும் நடத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்