TNPSC Thervupettagam

நட்சத்திரங்களின் பழங்கால ஓட்டங்கள்

March 28 , 2024 30 days 111 0
  • ஐரோப்பிய விண்வெளி முகமையின் கயா விண்வெளி தொலைநோக்கியானது சிவன் மற்றும் சக்தி என பெயரிடப்பட்ட இரண்டு மிகப் பழங்கால நட்சத்திர ஓட்டங்களை (இயக்கங்கள்) வெளிக் கொணர்ந்துள்ளது.
  • பால் வெளி அண்டத்தின் தோற்றம் பற்றிய நமது புரிதலை இவை மிகவும் கணிசமாக மேம்படுத்தியுள்ளன.
  • இந்த வானியல் வடிவங்கள், 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பிணைக்கப் பட்டவையாகும்.
  • அவை நமது அண்டத்தின் உருவாக்கத்திற்கு வெகுவாகப் பங்களித்த ஆரம்பகாலக் கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
  • அவை பால்வெளி அண்டத்தின் சுழல் பகுதி மற்றும் வட்டு ஆகியவற்றின் மிகப் பழமையான பகுதிகளை விட முந்தையவையாகும்.
  • ஒவ்வொரு ஓட்டங்களும், குறிப்பிடத்தக்க வகையில் ஒத்த சுற்றுப்பாதைகள் மற்றும் கலவைகளில் நகரும் வகையிலான சும்மார் 12 முதல் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலான நட்சத்திரங்களுடன் சுமார் 10 மில்லியன் சூரியன்களைக் கொண்டு இயங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்