November 28 , 2023
535 days
339
- நந்தினி ஆசாத், சர்வதேச ரைஃபைசன் ஒன்றிய (IRU) வாரியத்திற்கு இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- அவர் இந்திய மகளிர் கூட்டுறவு வலையமைப்பு (ICNW) மற்றும் உழைக்கும் பெண்கள் மன்றம் (இந்தியா) ஆகியவற்றின் தலைவர் ஆவார்.
- 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், IRU வாரியத்தில் இணைந்த முதல் பெண்மணி இவரே ஆவார்.
- IRU என்பது ‘கூட்டுறவுகளின் தந்தை’ எனக் கருதப்படும் தேசிய கூட்டுறவு அமைப்புகளின் உலகளாவியச் சங்கம் என்பதோடு இதில் 53 உறுப்பினர் அமைப்புகள் உள்ளன.
- திருமதி. ஆசாத், ரோம் நகரில் உள்ள உலக விவசாயிகள் அமைப்பினால் நியமிக்கப் பட்ட கூட்டுறவு அமைப்புகளின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

Post Views:
339