TNPSC Thervupettagam

நன்றியுரைத் தீர்மானம் 2026

February 8 , 2026 9 days 45 0
  • பிரதமரின் வழக்கமான பதில் உரை இல்லாமலேயே, மக்களவை குரல் வாக்கெடுப்பு மூலம் நன்றியுரைத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • காலை முதல் தொடர்ச்சியான இடையூறுகளுக்குப் பிறகு, சபாநாயகர் நன்றியுரைத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை வாக்கெடுப்புக்கு விட்டார்.
  • அவை நிராகரிக்கப்பட்டன.
  • பின்னர், சபாநாயகர் ஓம் பிர்லா, ஜனவரி 28 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கான நன்றியுரைத் தீர்மானத்தைப் படித்துக் காட்டினார்.
  • எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் தொடர்ந்த போதிலும், அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பிரதமர் மக்களவையில் இல்லை.
  • உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் அந்த அவையில் இருக்கவில்லை.
  • குடியரசுத் தலைவர் உரைக்கான நன்றியுரைத் தீர்மானம் பிரதமரின் பதில் உரை இல்லாமல் நிறைவேற்றப்பட்டது கடைசியாக ஜூன் 2004-ல் ஆகும்.
  • அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், மக்களவையில் நடந்த விவாதத்திற்கு தனது பதில் உரையை வழங்க முடியவில்லை.
  • மாநிலங்களவையானது, நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இங்கு பிரதமரின் உரை 97 நிமிடங்கள் நீடித்தது.
  • எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லாத நிலையில், அவர்களால் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்