நபார்டு வங்கியானது 28 பொருட்களின் புவிசார் குறியீட்டுப் பதிவுக்கு வழி வகுத்து உள்ளது.
மொத்தத்தில், 176 பொருட்கள் புவிசார் குறியீட்டுப் பதிவைப் பெறுவதற்கு இது ஆதரவளித்துள்ளது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 1982-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.
இது 1979-ஆம் ஆண்டில் சிவராமன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிறுவப்பட்டது.
இது இந்தியாவின் உச்ச வளர்ச்சி நிதி நிறுவனமாகும்.
இது முழுமையாக இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமானது.
இது நிலையான வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல், நிதியளித்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றிற்குப் பொறுப்பாகும்.
இது இந்தியாவில் உள்ள மண்டல ஊரக வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் ஒட்டுமொத்த மேற்பார்வைக்கான ஒரு உச்ச மேற்பார்வைக் குழுவாகும்.
இது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிச் சேவைகள் துறையின் (DFS) கீழ் செயல்படுகிறது.
கிராமப்புறங்களில் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக முதலீடு மற்றும் உற்பத்திக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இது ஒரு உச்ச நிதி நிறுவனமாகச் செயல்படுகிறது.
மேலும் இது, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து மாநிலக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் (SCARDBs), மாநில கூட்டுறவு வங்கிகள் (SCBs), மண்டல ஊரக வங்கிகள் (RRBs), வணிக வங்கிகள் (CBs) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பிற நிதி நிறுவனங்களுக்கு நிதியை மறு நிதி அளிக்கிறது.