யோகாவிற்காகவே என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ‘நமஸ்தே யோகா’ எனும் ஒரு கைபேசி செயலியானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து ஆயுஷ் அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் வெளியிடப்பட்டது.
நமஸ்தே யோகா செயலியானது பொதுமக்களுக்கான ஒரு தகவல் தளமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
யோகாவைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் பெருவாரியான சமூகத்தினர் யோகாவினை எளிதில் பெறக் கூடிய வகையில் அதனை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த செயலி வெளியிடப் பட்டுள்ளது.