இந்தியப் பிரதமர் நமாமி கங்கைத் திட்டத்தின் கீழ் 6 திட்டங்களை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
அந்த திட்டங்கள் பின்வருமாறு:
ஒரு நாளைக்கு 68 மில்லியன் லிட்டர் அளவு (MLD - Million litres per day) கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக் கட்டமைப்பு (STP - Sewage treatment plant)
ஜக்ஜீத்பூர், ஹரித்துவார் ஆகிய இடங்களில் 27 அளவு MLD ஆலையை மேம்படுத்துதல்.
68 அளவு MLD ஜக்ஜீத்பூர் திட்டத்தைக் கட்டமைத்தல்.
ரிஷிகேஷில் 26 அளவு MLD ஆலையைத் திறந்து வைத்தல்.
ஹரித்துவாரின் தராயில் 18 அளவு MLD STPயைக் கட்டமைத்தல்
சிர்பானியில் 5 அளவு MLD STPஐத் திறந்து வைத்தல்.
மேலும், பத்ரிநாத்தில் 2 STPகள்.
இவர் தேசியத் தூய்மை கங்கைத் திட்டம் மற்றும் இந்திய வனவிலங்கு மையம் ஆகியவற்றினால் இணைந்து பிரசுரிக்கப்பட்ட “வழிந்தோடும் கங்கை” என்ற ஒரு புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.