55.8 மதிப்பெண்களுடன் 2025 ஆம் ஆண்டு நம்பியோ பாதுகாப்புக் குறியீட்டில் இந்தியா உலகளவில் 67வது இடத்தைப் பிடித்தது.
நகரங்கள் மற்றும் உலக நாடுகள் பற்றிய பயனர் பங்களிப்பு தரவுகளின் இயங்கலை வழி உலகளாவிய தரவு தளமான நம்பியோ தளத்தினால் இந்தத் தரவு வெளியிடப்பட்டது.
உலகளவில் 49வது இடத்தில் உள்ள கர்நாடகாவின் மங்களூர் இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள வடோதரா மற்றும் அகமதாபாத் ஆகியவை முறையே தேசிய அளவில் 2வது மற்றும் 3வது பாதுகாப்பான நகரங்களாகவும், உலகளவில் 85வது மற்றும் 93வது பாதுகாப்பான நகரங்களாகவும் உள்ளன.
ஜெய்ப்பூர், நவி மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை 60க்கும் மேற்பட்ட பாதுகாப்புக் குறியீட்டு மதிப்பெண்களுடன் முறையே இந்தியாவில் 5, 6 மற்றும் 7 வது இடங்களில் உள்ளன.
தமிழ்நாட்டின் சென்னை நகரமானது இந்தியாவில் 8 வது இடத்திலும், உலகளவில் 158 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.
புது டெல்லி, நொய்டா மற்றும் காஜியாபாத் போன்ற நகரங்கள் 55க்கும் மேற்பட்ட அதிக குற்றக் குறியீட்டு மதிப்பெண்களுடன் பாதுகாப்பில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றன.