உலகளவில் 304 நகரங்களை உள்ளடக்கிய நம்பியோ பாதுகாப்புக் குறியீடு 2026 தர வரிசை வெளியிடப்பட்டது.
சீனாவின் கிங்டாவோ உலகின் பாதுகாப்பான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது.
கர்நாடகாவின் மங்களூரு இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக உருவெடுத்தது.
வன்முறை குற்றம், சொத்து குற்றம் மற்றும் இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான கணக்கெடுப்பு பதில்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட என்று பாதுகாப்பு மற்றும் குற்ற நிலைகளை இந்தக் குறியீடு அளவிடுகிறது.
இந்தியாவின் முதல் ஐந்து பாதுகாப்பான நகரங்கள் மங்களூரு (74.4), அகமதாபாத் (68.5), ஜெய்ப்பூர் (65.3), கோயம்புத்தூர் (62.0) மற்றும் திருவனந்தபுரம் (61.0) ஆகும்.
55.8 என்ற சராசரிப் பாதுகாப்பு மதிப்பெண்ணுடன், மிதமான பாதுகாப்புப் பிரிவில் ஒட்டு மொத்தமாக, இந்தியா உலகளவில் 70வது இடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லி, நொய்டா மற்றும் குருகிராம் போன்ற பெரிய பெருநகரப் பகுதிகள் இந்தியாவின் மிகக் குறைந்த பாதுகாப்பான நகரங்களில் இடம் பெற்றுள்ளன.
2026 ஆம் ஆண்டில் உலகளவில் பாதுகாப்பான நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் (86.0), கத்தார் (84.8) மற்றும் அன்டோரா (84.8) ஆகியவை அடங்கும்.
பப்புவா நியூ கினியா, வெனிசுலா மற்றும் ஹைட்டி ஆகியவை மிகக் குறைந்த பாதுகாப்பான நாடுகளில் அடங்கும்.