பெங்களூரு நகரக் காவல்துறை, 'நம்ம 112' (Namma 112) அவசரக்கால அமைப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பலமொழி மேம்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
'நம்ம 112' என்பது இந்தியாவின் தேசிய அவசரகால உதவி எண்ணான 112-இன் அவசரகாலப் பதிலளிப்பு ஆதரவு அமைப்பின் (ERSS) ஒரு பகுதியாகும்.
'VANKI' (நாடு தழுவிய முக்கியத் தலையீடுகளுக்கான பலமொழி குரல் செயற்கை நுண்ணறிவு) எனப்படும் புதிய அமைப்பு, அவசர அழைப்புகளின்போது நிகழ்நேர மொழி பெயர்ப்பை சாத்தியமாக்குகிறது.
மொழித் தடைகள் இல்லாமல் காவல்துறை, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவைகளின் மூலம் விரைவான பதிலளிப்பை வழங்க இந்த அமைப்பு உதவுகிறது.
அவசரகால உதவி எண் சேவைகளில் பன்மொழி செயற்கை நுண்ணறிவை அறிமுகப் படுத்திய இந்தியாவின் முதல் நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.