TNPSC Thervupettagam
August 29 , 2026 15 days 185 0
  • 2025-26 ஆம் ஆண்டிற்கான இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான நம்மாழ்வார் விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
  • சி. நல்லசிவம் (நாமக்கல்), ஏ. சுப்பிரமணியன் (புதுக்கோட்டை), மற்றும் சாதனா (செங்கல்பட்டு) ஆகியோருக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
  • ஒவ்வொரு விருதும் ₹2 லட்சம் ரொக்கப் பரிசையும் ஒரு பதக்கத்தையும் உள்ளடக்கியது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கத்தை, மறைந்த தலைமை ஆசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜாவின் மனைவி ஸ்ரீஷாவிடம் முதலமைச்சர் வழங்கினார்.
  • விவசாயப் பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த எட்டு வயது மாணவியைக் காப்பாற்றும் முயற்சியில் வீரமரணமடைந்த கௌரிசங்கர் ராஜாவிற்கு மரணத்திற்குப் பின் இவ்விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்