TNPSC Thervupettagam

நம்மாழ்வார் விருதுகள் 2025

May 5 , 2025 16 days 141 0
  • கோவை, திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மூன்று விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கியதற்காக தமிழக அரசின் இந்த ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதைப் பெற்றுள்ளனர்.
  • கோவை மாவட்டத்தைச் சேர்ந்த G. சம்பத்குமார் முதல் பரிசைப் பெற்றார்.
  • திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த D. ஜெகதீஷ் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த V. காளிதாஸ் இதில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றனர்.
  • இயற்கை வேளாண்மை முறையை நன்கு கடைப்பிடித்து ஊக்குவிக்கும் மற்றும் சக இயற்கை விவசாயிகளை ஆதரிக்கும் விவசாயிகளை அரசின் நம்மாழ்வார் விருது ஊக்குவித்து கௌரவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்