ஊரக வளர்ச்சி அமைச்சகம் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று ‘நயீ சேத்னா – பஹல் பத்லாவ் கி’ பிரச்சாரத்தின் ஐந்தாவது பதிப்பைத் தொடங்க உள்ளது.
இது தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (DAY-NRLM) கீழ் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இதன் கருத்துரு “From Access to Agency: Empowering Women through Livelihoods and Equal Opportunities for a Viksit Bharat” என்பதாகும்.
பாலின அடிப்படையிலான வன்முறை, பாலின சமத்துவமின்மை மற்றும் பாரபட்சமான சமூக விதிமுறைகளைக் களைவதோடு, பெண்களின் உரிமைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பு, சொத்துக்கள் மீதான கட்டுப்பாடு, பாதுகாப்பான நடமாட்டம் மற்றும் ஊதியமில்லாத பராமரிப்புப் பணிகளை மறுபகிர்வு செய்தல் ஆகியவை இதன் நான்கு முக்கியப் பகுதிகளாகும்.
இது சுயஉதவிக் குழுக்கள் (SHGs), கிராம அமைப்புகள் (VOs), தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள் (CLFs) மற்றும் பாலின வள மையங்கள் (GRCs) மூலம் செயல்படுத்தப்படும்.