மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “2030 ஆம் ஆண்டுக்கான இந்திய வேளாண்மை: விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தச் செய்வதற்கான நடவடிக்கைகள், ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் நிலையான உணவு மற்றும் பண்ணை அமைப்புகள்” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்தப் புத்தகமானது நிதி ஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகமானது 2019 ஆம் ஆண்டு முதல் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் செயல்படுத்தப் பட்டு, நிதி ஆயோக் மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை அமைச்சகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேசியப் பேச்சுவார்த்தைகளின் ஒரு விவாதச் செயல்முறையின் விளைவுகளை எடுத்துரைக்கிறது.