இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் & மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய இரு ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவை 2021 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று அவற்றின் ஸ்தாபன தினத்தைக் கொண்டாடுகின்றன.
கர்நாடகத்தில் இத்தினமானது ‘இராஜ்யோத்சவ்’ எனக் கொண்டாடப்படுகிறது.
முன்பாக தமிழ்நாடு மாநிலமும் நவம்பர் 01 அன்று அதன் ஸ்தாபன தினத்தைக் கொண்டாடி வந்தது.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க. ஜூலை 18 ஆம் தேதியானது தமிழ்நாட்டின் ஸ்தாபன தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது.