1945 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரமான நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட துயர சம்பவத்தை நினைவுகூரும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஹிரோஷிமா குண்டுவீச்சுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று, அமெரிக்கா நாகசாகி மீது "ஃபேட் மேன்" என்ற பெயரிலான அணுகுண்டை வீசியது.
சில நாட்களுக்குப் பிறகு, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, ஜப்பான் சரணடைந்தது, இது இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறித்தது.