TNPSC Thervupettagam

நாகப்பட்டினத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஆய்வு

May 22 , 2025 8 hrs 0 min 17 0
  • தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையானது, நாகப்பட்டினம் துறைமுக நகரத்தில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்குவதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
  • முதலாம் இராஜராஜ சோழன் (கி.பி 985-1014) காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஒரு புத்த மடாலயமான சூடாமணி விஹாராவின் எஞ்சியப் பகுதிகளைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும்.
  • இதில் நாகப்பட்டினம் பகுதியானது, தென்னிந்தியாவில் புத்த மதம் நிலைப்பெற்று விளங்கியப் பகுதியாக/புத்த மதத்தின் கோட்டையாக இருந்ததாக நம்பப்படுகிறது.
  • அதன் அருகில் அமைந்துள்ள, முற்கால/ஆரம்பகாலச் சோழர்களின் தலைநகராகவும், பண்டைய துறைமுக நகரமாகவும் விளங்கிய பூம்புகார் ஆனது காவேரிபூம்பட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • மாநில அரசானது இந்த ஆண்டு பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் இடையே ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்