தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற 100 பாம்பு மீட்புப் பணியாளர்களுடன் நாகம் செயலி செயல்படும்.
நாகம் என்பது பாம்பு மீட்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் அறிவியல்சார் தரவு சேகரிப்பை வலுப்படுத்தவும் வேண்டி வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய கைபேசித் தளமாகும்.
இது மாநிலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த வனவிலங்கு மீட்பு முயற்சிகளை சிறந்த முறையில் ஊக்குவிப்பதற்காக வனத்துறையால் ஜூலை 2025 இல் வெளியிடப் பட்டது.
இந்த செயலியானது கேரளாவின் பாம்பு மீட்புத் தளமான SARPAவை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது பதிலளிக்கும் நேரத்தை மேம்படுத்தவும் பாம்புப் பரவல் முறைகளைப் படிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாம்பு மீட்பு அழைப்புகள் வழக்கமாக அதிகரிக்கும் பருவமழை தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, இந்தச் செயலி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.