சமீபத்தில், மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள நாகர்த்தன் கிராமத்தில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த அகழ்வாராய்ச்சியானது வாகாடக வம்சத்தின் வாழ்க்கை, மதம் மற்றும் வர்த்தக நடைமுறைகள் ஆகியவை குறித்த ஆதாரங்களை வழங்கியுள்ளது.
நாகர்த்தன் கிராமமானது வாகாடக இராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கியது.
வாகாடக வம்சமானது கி.பி 3 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மத்திய தக்காணப் பகுதியில் தோன்றியது.
இதன் பேரரசானது பின்வரும் பகுதிகள் வரை பரவியுள்ளதாக நம்பப் படுகின்றது.
வடக்கில் மால்வா மற்றும் குஜராத்தில் இருந்து தெற்கில் துங்கபத்ரா நதி வரை,
மேற்கில் அரபிக் கடலில் இருந்து கிழக்கில் வங்காள விரிகுடா வரை.
கண்டுபிடிப்புகள்
நாகார்த்தன் கிராமத்தில் இருந்து களிமண் முத்திரைகள் தோண்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ராணி பிரபாவதிகுப்தா என்பவரால் வழங்கப்பட்ட செப்புத் தகடானது குப்தர்களின் வம்சாவளியிலிருந்து தொடங்குகின்றது. இந்த செப்புத் தகடானது ராணியின் தாத்தாவான சமுத்திரகுப்தா மற்றும் அவரது தந்தை இரண்டாம் சந்திரகுப்தர் ஆகியோரைக் குறிப்பிடுகின்றது.
வாகாடர்கள் மத்தியத் தரைக்கடல் வழியாக ஈரானுடனும் அதற்கு அப்பாலும் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த முத்திரைகள் அந்தப் பேரரசின் தலைநகரிலிருந்து வழங்கப்பட்ட அலுவல்பூர்வ அரச அனுமதியாகப் பயன்படுத்தப்பட்டன என்று நம்பப்படுகின்றன.