நாகா அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மத்திய அரசின் இடையீட்டுப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து R.N. ரவி ராஜினாமா
September 25 , 2021 1452 days 534 0
2014 ஆம் ஆண்டு முதல் நாகா அமைதிப் பேச்சு வார்த்தைக்கான மத்திய அரசின் இடையீட்டுப் பேச்சாளராகப் பணியாற்றி வந்த R.N. ரவி அந்தப் பொறுப்பிலிருந்து விலகி உள்ளார்.
இவர் இந்தப் பொறுப்பில் இருந்தபோது நாகா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்வதற்காக பல முக்கியக் கிளர்ச்சி குழுக்களுடன் அவர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
நாகா அமைதி செயல்முறையைக் கையாண்ட இவரது வழிமுறைகளுக்குத் தொடர்ந்து அக்குழுக்கள் மறுப்பு தெரிவித்ததையடுத்து மத்திய அரசு அவரை தமிழக ஆளுநராக நியமித்தது.