119 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு நாகாலாந்து மாநிலத்தின் ஷோகுவியில் ஒரு புதிய இரயில் நிலையம் அமைக்கப்பட்டதன் மூலம் அது தனது இரண்டாவது இரயில் நிலையத்தைப் பெற்றது.
டோன்யி போலோ எக்ஸ்பிரஸ் இரயிலானது தினமும் அசாமின் குவஹாத்தி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் நஹர்லாகுன் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப் படுகிறது.
டோன்யி போலோ எக்ஸ்பிரஸ் இரயிலின் சேவையானது ஷோகுவி ரயில் நிலையம் வரை நீட்டிப்பதன் மூலம் நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் நேரடியாக இரயில் சேவை மூலம் இணைக்கப்படும்.
இம்மாநிலத்தின் முதல் ரயில் நிலையமான திமாபூர் ரயில் நிலையம் 1903 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.