ஈர்ப்பு விசை மீட்சி மற்றும் உள்ளக ஆய்வகம் (GRAIL) திட்டம் ஆனது நிலவின் ஈர்ப்புப் புலத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது எப் மற்றும் ஃப்ளோ என்ற இரண்டு எந்திர ஆய்வுக்கலங்களைக் கொண்டிருந்தது.
நாசாவின் இந்த GRAIL திட்டம் ஆனது நிலவின் இரண்டு அரைக் கோளங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.
பூமியை நோக்கியுள்ள ஒரு பக்கமானது அதாவது அண்மைப் பக்கம் ஆனது சேய்மைப் பக்கத்தினை விட வெப்பமாகவும் அதன் ஆழ்ந்தப் பகுதியில் புவியியல் ரீதியாக அதிக செயல்பாடுகள் மிக்கதாகவும் உள்ளது.
பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, நிலவின் அண்மைப் பக்கத்தில் ஏற்பட்ட தீவிரமான எரிமலை செயல்பாடுகள் பரந்த பாசால்டிக் எனும் பாறைச் சமவெளிகளை உருவாக்க வழி வகுத்தது.
இதற்கு நேர்மாறாக, சேய்மைப் பக்கத்தில் / பின்புறத்தில் இலகுவான, பழைய கண்ட மேலோட்டினால் மூடப்பட்டிருக்கும் என்பதோடு இது ஒரு பெரிய அளவிலான எரிமலை வெடிப்பு பெரும்பாலும் நிகழாத பகுதியாக உள்ளது.
அண்மைப் பக்கத்தின் மூடகம் ஆனது சேய்மைப் பக்கத்தினை விட 100 முதல் 200°C வரை வெப்பமாக உள்ளது.