நாசிசம் மற்றும் நியோ நாசிசத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் தீர்மானம்
November 18 , 2022 1098 days 487 0
ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட 'நாசிசத்தை மகிமைப்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் நியோ நாசிசத்தை எதிர்த்துப் போராடுதல்’ எனப்படும் ஒரு வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இனவெறி, இனப் பாகுபாடு, வெளிநாட்டவர் மீதான வெறுப்புணர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய சகிப்புத் தன்மையின்மையின் இதர சமகால வடிவ பிரச்சினைகளைத் தூண்டுவதற்கு பங்காற்றும் பிற நடைமுறைகளும் இதில் அடங்கும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 105 நாடுகள் ஆதரவு அளித்தன.
52 நாடுகள் (பெரும்பாலும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு மற்றும் ஐரோப்பிய நாடுகள்) இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், 15 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகின.