17வது மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஆம் ஆண்டின் இந்தியப் பொது தேர்தல் ஏப்ரல் 11 தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
900 மில்லியன் இந்தியக் குடிமக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் 67.11 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்தியப் பொதுத் தேர்தல்கள் வரலாற்றில் இதுவே அதிகமானதாகும்.
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 66.4 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இது இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவிகிதமாக தற்பொழுது விளங்குகின்றது.