March 22 , 2026
15 hrs 0 min
49
- 2026–27 நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற, மக்களவை சமீபத்தில் கட்டாய நிறைவேற்றல் (Guillotine) நடைமுறையைப் பயன்படுத்தியது.
- Guillotine என்பது குறிப்பிட்ட காலத்திற்குள் நிதி கோரிக்கைகளுக்கு ஒரு விரைவான ஒப்புதலைப் பெற பயன்படும் ஒரு நாடாளுமன்ற நடைமுறையாகும்.
- விவாத நேரம் முடிந்து, பல கோரிக்கைகள் நிலுவையில் இருக்கும்போது மக்களவை சபாநாயகரால் இது பயன்படுத்தப்படுகிறது.
- இதன் கீழ், நிலுவையில் உள்ள அனைத்து "மானியக் கோரிக்கைகளும்" மேலதிக விவாதமின்றி ஒன்றாக வாக்கெடுப்புக்கு விடப்படுகின்றன.
- இது முக்கியமாக மத்தியப் பட்ஜெட் செயல்பாட்டின் போது அமைச்சக வாரியான செலவின ஒப்புதலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
Post Views:
49