TNPSC Thervupettagam

நாடு தழுவிய VoWiFi சேவை

January 5 , 2026 3 days 73 0
  • பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நாடு தழுவிய அளவிலான அருகலை வழி குரல் அழைப்பு (VoWiFi) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • VoWiFi பயனர்கள் கைபேசி இணைப்புச் சேவை கோபுரங்களுக்குப் பதிலாக அருகலை வலையமைப்பினைப் பயன்படுத்தி குரல் வழி அழைப்புகளைச் செய்யவும் செய்திகளை அனுப்பவும் அனுமதிக்கிறது.
  • இந்தச் சேவையானது எந்தக் கூடுதல் செயலியும் இல்லாமல், பயனரின் தற்போதைய கைபேசி எண் மற்றும் தொலைபேசி எண் சுழற்றியைக் கொண்டு செயல்படுகிறது.
  • இது IMS (IP பல் ஊடக ஆதரவு அமைப்பு) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அருகலை & கைபேசி வலையமைப்புகளுக்கு இடையிலான சீரான மாற்றத்தினை ஆதரிக்கிறது.
  • கிராமப்புறங்களிலும் கைபேசி சமிக்ஞைகள் பலவீனமாக உள்ள கட்டிடங்களுக்குள் உள்ளவர்களுக்கு VoWiFi உதவுகிறது.
  • இலவசமாக வழங்கப்படும் இந்தச் சேவை இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் உள்ள பெரும்பாலான நவீன திறன் பேசிகளில் இயங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்