TNPSC Thervupettagam

நாடு தழுவிய புலம்பெயர்வு கணக்கெடுப்பு

February 6 , 2026 9 days 118 0
  • தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) ஜூலை 2026 முதல் ஜூன் 2027 வரை நாடு தழுவிய புலம்பெயர்வு கணக்கெடுப்பை நடத்தவுள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்படும்.
  • இந்தக் கணக்கெடுப்பு கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கிய, மாநிலங்களுக்கு இடையேயான, பருவகால மற்றும் சொந்த ஊருக்கு திரும்பும் இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர்வதற்கான காரணங்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும்.
  • வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் திட்டமிடலுக்கு ஆதரவளிக்கும் வகையில், இடம்பெயர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு விவரங்களையும் இது உள்ளடக்கும்.
  • முன்னதாக, இடம்பெயர்வு குறித்த தரவுகள் 2020-21 ஆம் ஆண்டின் காலமுறை தொழிலாளர்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு (PLFS) மற்றும் 2020-21 ஆம் ஆண்டின் பல்துறை குறிகாட்டிக் கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்