நாடு தழுவிய புலிகள் கணக்கீட்டு நடவடிக்கையின் முதல் கட்டம்
January 5 , 2026 8 days 78 0
2026 ஆம் ஆண்டு அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டின் (AITE) முதல் கட்டம் தொடங்கப் பட உள்ளதாக தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.
இது உலகின் மிகப்பெரிய வனவிலங்கு கண்காணிப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாகும்.
AITE நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.
இது புலிகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள் மற்றும் கழுதைப் புலிகள் போன்ற இணை வேட்டையாடி இனங்களை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காட்டெருமை, சம்பார் மான், புள்ளிமான் மற்றும் குரைக்கும் மான் (செம்மான்) உள்ளிட்ட மாபெரும் தாவர உண்ணிகளின் இரை எண்ணிக்கையை மதிப்பிடச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அங்க அடையாள ஆய்வுகள், உடலில் வரிகளின் குறுக்குவெட்டுகள், ஒளிப்படக் கருவிப் பதிவுப் பயிற்சிகள் மற்றும் மரபணு மாதிரி மூலம் விரிவான வாழ்விட மதிப்பீட்டையும் உள்ளடக்கியது.
தமிழ்நாட்டில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை ஆகிய ஐந்து புலிகள் வளங்காப்பகங்கள் உள்ளன.
2018 ஆம் ஆண்டில் 264 ஆக இருந்த மாநிலத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 306 ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் பயிற்சி அனைத்துப் புலிகள் சரணாலயங்கள், பிற புலி வாழ்விடங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க மாமிச உணவு இருப்பு உள்ள தனியார் தோட்டங்களை உள்ளடக்கும்.
முன்னணி ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஒளிப்படக் கருவி நிறுவல்கள் மற்றும் M-STrIPES கண்காணிப்பு அமைப்பு போன்ற தொழில்நுட்பம் ஆகியவை இந்த நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்படும்.