நாடு முடக்கத்தின் போது சிறப்புப் பொருளாதார மண்டலம்
April 3 , 2020 2113 days 803 0
நாடு முடக்கத்தின் போது நாட்டில் உள்ள ஏறத்தாழ 280 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ – Special Economic Zone) மருந்துகள், மருந்து சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 18% என்ற அளவிற்குப் பங்களிக்கின்றன.
2019-20 ஆம் ஆண்டில் SEZன் ஏற்றுமதியானது அதிகரித்து, 110 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
SEZகள் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005ன் கீழ் SEZகளைச் செயல்படுத்த மாநிலங்கள் அனுமதிக்கப் படுகின்றன.
இந்தச் சட்டமானது ஏற்றுமதி ஊக்குவிப்பில் மாநில அரசுகளின் பங்கை வரையறை செய்கின்றது.