நாடு வாரியாக இணைய சங்கேதப் பணம் மூலம் பெற்ற இலாபங்கள்
May 7 , 2022 1280 days 629 0
செயினலிசிஸ் என்ற அமைப்பு வெளியிட்ட 2021 ஆம் ஆண்டிற்கான நாடு வாரியான இணைய சங்கேதப் பணம் மூலம் பெற்ற இலாபங்கள் பட்டியலில் இந்தியா 21வது இடத்தைப் பெற்றுள்ளது.
உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் 2020 ஆம் ஆண்டில் இணைய சங்கேதப் பணம் மூலம் பெற்ற 32.5 பில்லியன் டாலர் இலாபத்துடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டில் அவர்கள் மொத்தம் 162.7 பில்லியன் டாலர் இணைய சங்கேதப் பணம் மூலம் பெற்ற இலாபத்தினைப் பெற்றுள்ளனர்.
இணைய சங்கேதப் பணச் சொத்துக்களில் ஈத்திரியம் எனும் நிறுவனமானது மிகவும் குறிப்பிடத் தக்க அளவிலான இலாபத்தினை ஈட்டுகிறது.
49.95 பில்லியன் டாலர் மதிப்பிலான இணைய சங்கேதப் பண இலாபத்துடன் அமெரிக்கா இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ஐக்கிய இராஜ்ஜியம், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.