இந்தியக் கடலோரக் காவல்படையானது, 'நாட்போல்ரெக்ஸ்-VIII' (8வது) எனப்படும் இரண்டு நாள்கள் வரை நடைபெறும் தேசிய அளவிலான மாசு எதிர்ப்புப் பயிற்சியைத் தொடங்கியது.
கடலில் கசிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய இந்த தயார்நிலைப் பயிற்சியைப் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் தொடங்கி வைத்தார்.
நாட்போல்ரெக்ஸ்-VIII பயிற்சியின் நோக்கம் கடலில் ஏற்படும் கசிவு நிகழ்வுகளை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து பங்குதாரர்களின் தயார்நிலை மற்றும் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதாகும்.