கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எல்லைப் பதற்றம் காரணமாக ஆறு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிக்கிமின் நாது லா கணவாய் வழியான இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று மீண்டும் தொடங்கியது.
பண்டைய பட்டுப் பாதையின் ஒரு பகுதியான நாது லா கணவாய் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான நியமிக்கப்பட்ட எல்லை வர்த்தகப் புள்ளிகளில் ஒன்றாகும்.
தற்போதுள்ள இருதரப்பு வர்த்தக நெறிமுறைகளின் கீழ் நவம்பர் மாதம் வரை (திங்கள் முதல் வியாழன் வரை) இந்த பருவகால வர்த்தகம் நடைபெறும்.
கூடுதலாகப் வீரர்களை நியமித்தல் மற்றும் முதன்முறையாக ஒரு பெண்கள் படையணியை நிறுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) செயல்படுத்தியுள்ளது.
1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா போரைத் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நாது லா எல்லை வர்த்தகம் 2006 ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப் பட்டது.