நாதெண்ட்லா பாஸ்கர் ராவ் தனது 90வது வயதில் ஹைதராபாத்தில் காலமானார்.
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த அவர் 1984 ஆம் ஆண்டில் சிறிது காலம் அப்பதவியில் பணியாற்றினார்.
அவர் 1982 ஆம் ஆண்டில் என்.டி. ராமராவ் தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சியின் (TDP) ஸ்தாபன உறுப்பினராக இருந்தார்.
அவர் தெலுங்கானாவின் கம்மம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் (MLA), அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஆகவும் பணியாற்றினார்.
1984 ஆம் ஆண்டில் இவரது பதவிக் காலம் பெரும் அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிக்கு வழி வகுத்ததோடு அதன் பிறகு என்.டி. ராமராவ் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.