நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு
March 6 , 2020 1993 days 1215 0
ICONSAT (நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச மாநாடு - International Conference on Nano Science and Technology) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நானோ திட்டத்தின் தலைமையில் இந்தியாவில் நடைபெறும் ஒரு சர்வதேச மாநாட்டுப் பதிப்பாகும். இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது.
ICONSAT -2020ஐ கொல்கத்தாவில் உள்ள எஸ்.என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தால் நடத்தப்படுவதற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நானோ திட்டமானது ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மாநாடானது மார்ச் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகின்றது.
நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பகுதிகளில் சமீபத்திய வளர்ச்சியுடன் வேகத்தை வைத்திருப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.