TNPSC Thervupettagam
October 30 , 2025 16 hrs 0 min 14 0
  • மேம்பட்ட குறைக்கடத்தி வடிவமைப்புத் துறையில் நுழைவதைக் குறிக்கும் வகையில், இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 7-நானோமீட்டர் மையச் செயலகத்தினை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • திறந்த மூல RISC-V கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட SHAKTI முன்னெடுப்பின் கீழ் மதராசின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினால், இந்தச் செயலி உருவாக்கப்படுகிறது.
  • இந்த முன்னெடுப்பானது, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் வழி நடத்தப்படுகிறது மற்றும் ஆரம்பம் முதல் இறுதிக் கட்ட குறைக் கடத்தி உற்பத்தித் திறன்களை உருவாக்க இந்தியக் குறைக் கடத்தி திட்டத்துடன் ஒருங்கி அமைகிறது.
  • இது நிதி, தகவல் தொடர்பு, பாதுகாப்பு, 5G, செயற்கை நுண்ணறிவு மற்றும் மீக்கணினி ஆகியவற்றில் உயர் செயல்திறன், ஆற்றல் செயல்திறன் கொண்ட பயன்பாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்