TNPSC Thervupettagam

நான்காவது வந்தே பாரத் விரைவு இரயில்

October 19 , 2022 1033 days 493 0
  • உனாவில் இருந்து நான்காவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையைப் பிரதமர் அவர்கள் சமீபத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • இந்த இரயிலானது உனா (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் புது தில்லி இடையே இயங்கும்.
  • இந்த நான்காவது வந்தே பாரத் இரயில் ஆனது அதன் முந்தைய வடிவங்களை விட மேம்படுத்தப் பட்டதாகக் கருதப்படுகிறது.
  • வந்தே பாரத் விரைவு இரயிலானது, இரயில் 18 என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் இயக்கப்படும் ஒரு மித அதிவேக, நகரங்களுக்கு இடையே மின்சாரத்தில் இயங்கும் ஒரு பல-அலகு இரயில் ஆகும்.
  • மற்ற 3 வழித்தடங்கள்
    • புது டெல்லி முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா வரை
    • புது டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும்
    • காந்திநகர் முதல் மும்பை மத்திய இரயில் நிலையம் வரை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்