நான்கு உறுப்பினர்கள் கொண்ட கையகப்படுத்துதல் குழு – SEBI
June 24 , 2021 1524 days 633 0
சந்தை ஒழுங்குமுறை ஆணையமான இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (Security and Exchange Board of India – SEBI) நான்கு உறுப்பினர்கள் அடங்கிய தனது (பொறுப்பு ஏற்பு) கையகப் படுத்துதல் குழுவினை மீண்டும் நியமித்து மறு நியமனம் செய்து உள்ளது.
சிறுபான்மை அளவிலான பங்குதாரர்களைப் பெறுவதற்கு ஒரு கையகப்படுத்தும் நிறுவனத்திற்கு தேவையான கட்டாயப் பங்குப் பரிவர்த்தனை அனுமதியிலிருந்து விலக்கு பெற அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை இக்குழுவானது மதிப்பிடுகிறது.
டெலாய்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான N. வெங்கட்ராமன் அவர்களை இக்குழுவின் புதிய உறுப்பினராக SEBI நியமித்துள்ளது.
SEBI இக்குழுவினை முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைத்தது.
இக்குழுவானது பாங்க் ஆஃப் பரோடாவின் முன்னாள் தலைவர் K. கண்ணன் அவர்களுடைய தலைமையில் அமைக்கப்பட்டது.