- இதுவரை கிடைத்த இராஜேந்திர சோழனின் காலத்தினைச் சேர்ந்த மிகவும் மதிப்பு மிக்கப் பதிவுகளில், நான்கு செப்புத் தகடு கல்வெட்டுகள் வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- திருவாலங்காடு செப்புத் தகடுகள், கரந்தை செப்புத் தகடுகள், திருக்களார் செப்புத் தகடுகள் மற்றும் எசாலம் செப்புத் தகடுகள் சோழ வம்சாவளி, கோயில் நன்கொடைகள் மற்றும் இராணுவப் படையெடுப்புகளை எடுத்துக் காட்டுகின்றன.
- இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராஜேந்திர சோழன், சோழப் பேரரசின் எல்லைகளை இந்திய துணைக் கண்டத்திற்கு அப்பால் விரிவுபடுத்தினார்.
- தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இராணுவ வெற்றிகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தாராளமான நில மானியங்கள் மற்றும் கோயில்களுக்கான ஆதரவும் அவரது ஆட்சியை சிறப்புப்படுத்தின (கி.பி. 1012-1044).
- இந்தக் கல்வெட்டுகள் சோழ வம்சாவளி, கோயில் நன்கொடைகள் மற்றும் இராணுவப் படையெடுப்புகள் குறித்து வெளிக் கொணர்கின்றன.
- வே. மகாதேவன் மற்றும் கா. சங்கரநாராயணன் (தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) எழுதிய சோழர் செப்பேடுகள் மற்றும் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி M. இராஜேந்திரன் (அகனி பதிப்பகம்) எழுதிய சோழர் காலச் செப்பேடுகள் ஆகிய புத்தகங்கள், பல்வேறு சோழ மன்னர்களின், குறிப்பாக இராஜேந்திர சோழரின் செப்புத் தகடு கல்வெட்டுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
திருவாலங்காடு செப்புத் தகடுகள்
- திருவாலங்காடு செப்புத் தகடுகள் முதன்முதலில் 1903-04 ஆம் ஆண்டிற்கான இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- இந்தத் தகடுகள் பின்னர் கல்வெட்டு நிபுணர் ராவ் பகதூர் H. கிருஷ்ண சாஸ்திரியின் தென்னிந்திய கல்வெட்டுகள் புத்தகத்தின் மூன்றாம் தொகுதியில் வெளியிடப் பட்டன.
- 31 செப்புத் தகடுகள் இருந்த இந்தத் தொகுப்பில், முதல் 10 சமஸ்கிருதத்திலும் மீதமுள்ள 21 தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
- இக்கல்வெட்டு சமஸ்கிருதப் பிரிவு, முதல் தமிழ்ப் பிரிவு மற்றும் இரண்டாவது தமிழ்ப் பிரிவு என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
- கல்வெட்டு நிபுணர் V. வெங்கையாவின் கூற்றுப்படி, தமிழ்ப் பிரிவுகள் முந்தைய காலத்தினைச் சேர்ந்ததாகவும், சமஸ்கிருதப் பிரிவு பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- இரண்டாவது தமிழ்ப் பிரிவு முதலாம் இராஜேந்திர சோழனின் ஆறாவது ஆட்சி ஆண்டைக் குறிக்கிறது என்பதால் இது கி.பி 1018 ஆம் ஆண்டில் வைக்கப்பட்டது.
- இத்தகடுகள் அரசச் சின்னங்களுடன் கூடிய வட்ட வடிவ செப்பு முத்திரையால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன.
- இது ஓர் கவிகையின் இரு புறமும் இரண்டு கவரிகள், ஒரு புலி (சோழ சின்னம்), இரண்டு மீன்கள் (பாண்டிய சின்னம்), ஒரு வில் (சேர சின்னம்), ஒரு பன்றி (சாளுக்கிய சின்னம்), ஒரு ஸ்வஸ்திகம் மற்றும் இரண்டு விளக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இந்தத் தகடுகள், இராஜேந்திர சோழன் (திருவள்ளூர் மாவட்டத்தில்) திருவாலங்காடு சிவன் கோயிலுக்கு பழையனூர் கிராமத்தைப் பரிசாக வழங்கிய அரச உத்தரவைப் பதிவு செய்தன.
கரந்தை செப்புத் தகடுகள்
- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் உள்ள அம்மாபேட்டைக்கு அருகிலுள்ள புதூர் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் கரந்தை செப்புத் தகடுகள் கண்டெடுக்கப்பட்டன.
- ஆரம்பத்தில் புதூர் செப்புத் தகடுகள் என்று அழைக்கப்பட்ட இவை, 1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள கருந்தட்டான்குடியில் கரந்தை தமிழ் சங்கத்தினால் பாதுகாக்கப்பட்ட பின்னர் இவ்வாறு மறுபெயரிடப்பட்டன.
- அவை அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சேவு பாண்டியனுக்குச் சொந்தமான நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- 111.73 கிலோகிராம் எடையுள்ள 57 செப்புத் தகடுகள் இருந்த இந்தத் தொகுப்பானது, இரண்டு பெரிய செப்பு வளையங்களால் இணைக்கப்பட்டு இருந்தது, அவற்றில் ஒன்று உடைந்து இருந்தது.
- மீதமுள்ள வளையத்தில் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் சாளுக்கியர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட அரச முத்திரை, விளக்குகள், அரச குடையாணி மற்றும் கவரிகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
- 54 தமிழ்த் தகடுகளுள் பலவற்றில் 'திரிபு' என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது.
- இது இராஜேந்திர சோழனின் தாயாரின் நினைவாகப் பெயரிடப்பட்டுப் பரிசளிக்கப்பட்ட கிராமமான திரிபுவன மகாதேவி சதுர்வேதிமங்கலத்தைக் குறிக்கிறது.
திருக்களார் செப்புத் தகடுகள்
- திருக்களார் செப்புத் தகடுகள் திருக்களாரில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டன.
- இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியிலிருந்து தென்கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
- இந்தக் கோயிலில் தமிழில் பொறிக்கப்பட்ட ஐந்து செப்புத் தகடுகள் மற்றும் 23 கல்வெட்டுகள் இருந்தன, இவை அனைத்தும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை.
- அவற்றில் முதன்மையானது கி.பி 1030 (இராஜேந்திர சோழனின் 18வது ஆட்சி ஆண்டு) தேதியிட்டது ஆகும்.
- இந்தத் தகடுகள் திருக்களாரில் உள்ள மகாதேவர் கோயிலுக்கு வழங்கப் பட்ட நில மானியத்தை விவரிக்கின்றன.
- இது ‘அருள்மொழி தேவ வளநாட்டில்’ உள்ள ‘புறங்காரன்பை நாட்டின்’ ஒரு பகுதியாகும்.
எசாலம் செப்புத் தகடுகள்
- 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதியன்று திண்டிவனம் அருகே உள்ள எசாலத்தில் சிவன் கோயிலின் புனரமைப்பின் போது எசாலம் செப்புத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
- மூன்று வகையான வரலாற்று கலைப்பொருட்களும் ஒன்றாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தளம் எசாலம் ஆகும்.
- இதே போன்ற ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று பொருட்கள் பின்னர் 2010 ஆம் ஆண்டில் (மயிலாடுதுறை மாவட்டத்தில்) திரு இந்தளூரில் கண்டுபிடிக்கப்பட்டது.
- தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறை, இத்தகடுகளை ஆய்வு செய்து, அவை இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்தியது.
- அவை கி.பி 1036 (அவரது 24வது ஆட்சி ஆண்டு) தேதியிட்டவை ஆகும்.
- வெண்கல சிலைகளில் இராஜேந்திர சோழனின் குருவாக நம்பப்படும் சர்வ சிவ பண்டிதரின் சிலை இருந்தது.
- இரண்டு பக்கங்களிலும் பொறிக்கப்பட்ட இந்தத் தகடுகள், விளக்குகள், அரச குடையாணி மற்றும் கவரிகள் ஆகியவற்றுடன் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் சாளுக்கியர்களின் சின்னங்களைத் தாங்கிய முத்திரையுடன் கூடிய செப்பு வளையத்தால் கட்டப்பட்டிருந்தன.
- இக்கல்வெட்டுகள் சமஸ்கிருதத்தில் இராஜேந்திர சோழனின் வம்சாவளிக் காலத்தைக் குறிப்பிட்டு தொடங்கப்பட்டன.
- சர்வ சிவ பண்டிதர் கட்டிய கோயிலுக்கு அவர் வழங்கிய நில மானியங்களை தமிழ்ப் பகுதி விவரித்தது மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் கைப்பற்றப்பட்டப் பகுதிகளையும் அது பட்டியலிட்டது.
- அவரது 'மெய்கீர்த்தி' (அரசப் புகழாரம்) ஆனது, பிரபலமான வித்யாதர தோரணம் கடாரத்திலிருந்து (மலேசியாவில் உள்ள கடா) கொண்டு வரப் பட்டது என்று கூறுகிறது.
