நாம்தாபா புலிகள் காப்பகத்தில் 53 முன்னணிப் பணியாளர்கள் மற்றும் அனைத்து கடைநிலைப் பணியாளர்களையும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்துள்ளதால், அச்சரணாலயத்தில் வங்கப் புலிகளின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
நாம்தாபா பாதுகாக்கப்பட்ட பகுதியானது புலிகள் காப்பகமாகவும் தேசியப் பூங்காவாகவும் விளங்குகின்றது.
இது இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கிடையேயான சர்வதேச எல்லைக்கு அருகில் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
இது இந்தியாவின் மிகவும் கிழக்கில் உள்ள புலிகள் காப்பகமாகும்.