தேசிய ஓய்வூதிய அமைப்பின் முதலீட்டு விதிகளை நவீனமயமாக்குவதற்காக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவிற்கு மூலோபாயச் சொத்து ஒதுக்கீடு மற்றும் இடர் நிர்வாகக் குழு (SAARG) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாராயண் ராமச்சந்திரன் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழு தனது பரிந்துரைகளை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இது NPS முதலீட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் உலகளாவிய ஓய்வூதிய நடைமுறைகளுடன் அதை இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் குழுவானது தற்போதுள்ள சொத்து வகைகளை மதிப்பாய்வு செய்து, உகந்த ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்து, இடர் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதுடன், நிலைத்தன்மையை பேணும் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும்.