நாஷா முக்த் பாரத் : வருடாந்திர நடவடிக்கைத் திட்டம்
June 30 , 2020 1863 days 888 0
சமீபத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகமானது “நாஷா முக்த் பாரத் வருடாந்திர நடவடிக்கை (2020-21)” என்ற ஒரு திட்டத்தை வெளியிட்டு உள்ளது
இது போதை மருந்தின் சட்டவிரோதப் பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.
இது போதை மருந்து தடுப்பு அமைப்பு, சமூக நீதி அமைச்சகத்தின் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரத் துறையின் மூலம் சிகிச்சை அளித்தல் ஆகிய 3 கூறுகளின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
இந்தத் திட்டம் முதலில் 2015 ஆம் ஆண்டில் பஞ்சாபில் சிரோமணி அகாலி தளத்தால் ஆரம்பிக்கப் பட்டது.
மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக பெரும்பாலும் பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் முன்னிலையில் உள்ளதாக 272 மாவட்டங்களை போதை மருந்து தடுப்பு அமைப்பு அடையாளம் கண்டு இருக்கின்றது.